/* */

நாகப்பட்டினத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

நாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் தடுப்பூசி பணிகள் குறித்து அமைச்சர்மெய்யநாதன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நாகப்பட்டினத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு
X

நாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணி, தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் தமிழக சுற்றுசூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

நாகை தனியார் கல்லூரியில் செயல்பட்டுவரும் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த அமைச்சர் அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் நாகை டாடா நகரில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார். அதை தொடர்ந்து புதிய புயலில் சிக்கி மாயமான அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர் பிரவீன் வீட்டிற்கே நேரடியாக சென்ற அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் தனது சொந்த நிதியில் இருந்து மீனவரின் குடும்பத்திற்கு நிதி வழங்கினார். நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷாநவாஸ் திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 May 2021 10:37 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!