/* */

நாகப்பட்டினத்தில் பத்ரகாளி வேடமிட்டு கொரோனா விழிப்புணர்வு, போலீஸ் இன்ஸ்பெக்டர் அசத்தல்

நாகையில் பத்ரகாளிகாளியம்மன் வேடமிட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டுகோள் விடுத்தார்.

HIGHLIGHTS

நாகப்பட்டினத்தில் பத்ரகாளி வேடமிட்டு கொரோனா விழிப்புணர்வு, போலீஸ் இன்ஸ்பெக்டர் அசத்தல்
X

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பத்ரகாளியம்மன் வேடமிட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் கொரோனாவை அழிப்பது போல நடித்து காட்டினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுப்பதற்கு காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகப்பட்டினம் கடைவீதியில் நடைபெற்றது. அப்பொழுது நாகை நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி பத்ரகாளி வேடமிட்டு நடனமாடி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அதனைத்தொடர்ந்து அனைவரும் முக கவசம் அணிந்து வெளியில் வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா என்னும் அரக்கனைக் வதம் செய்ய முடியும் என்பதை உணர்த்தும் விதமாக மும் மதங்களை சேர்ந்த கடவுள் கொரோனாவை வதம் செய்து அழிப்பது போல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் ஏராளமான வணிகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Jun 2021 1:41 AM GMT

Related News