/* */

நாகையில் மஞ்சப்பை திட்டம்: கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

பேரணியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன் வளர்ச்சி கழக தலைவர் ஆகியோர் தொடக்கி சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

HIGHLIGHTS

நாகையில் மஞ்சப்பை திட்டம்: கல்லூரி மாணவ மாணவிகள்  விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
X

நாகையில் நடைபெற்ற மஞ்சப்பை விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் பங்கேற்ற  மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன் வளர்ச்சி கழக தலைவர், மாணவ மாணவிகள்.

தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்தை வரவேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளின் சைக்கிள் பேரணியில் நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு 8 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்தனர்.

தமிழக முதல்வர் கொண்டுவந்துள்ள மீண்டும் மஞ்சப்பை திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் மஞ்சப்பை திட்டத்தை வரவேற்று நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சைக்கிள் பேரணி சென்றனர். நாகூர் ரவுண்டானாவில் இருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன் வளர்ச்சி கழக தலைவர் ஆகியோர் மாணவ மாணவிகளோடு சேர்ந்த 8 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்க சைக்கிளில் மஞ்சப்பையை தொங்கவிட்டபடி சென்ற மாணவ மாணவிகள் பசுமையை மீட்டெடுக்க அனைவரும் மஞ்சப்பை பயன்பாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

நாகூரில் தொடங்கிய பேரணி நாகை புத்தூர் ரவுண்டானாவில் முடிவடைந்தது. நாகையில் தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்தை வரவேற்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் கல்லூரி மாணவ மாணவிகள் 8 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


Updated On: 1 Jan 2022 3:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...