/* */

பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கக்கோரி, நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
X

 நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர். 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் இணைந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். விவசாய சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில், நாகை, கீழ்வேளூர், வேதாரணியம், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயம் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வெள்ளத்தால் வேலையிழந்த விவசாய தொழிலாளர்களுக்கு 10,000 நிவாரணமாக வழங்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்திற்கும் 5000 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற தொடர் காத்திருப்பு போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மேற்கொண்டனர்.

Updated On: 6 Jan 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...