/* */

சைக்கிளில் அலுவலகத்திற்கு வந்தார் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்

அரசு உத்தரவு படி சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் சைக்கிளில் அலுவலகத்திற்கு வந்தார்.

HIGHLIGHTS

சைக்கிளில் அலுவலகத்திற்கு வந்தார் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்
X

நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று சைக்கிளில் அலுவலகத்திற்கு வந்தார்.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தின் புதன் கிழமைகளில் அரசு அதிகாரிகள் சைக்கிளில் அலுவலகம் வரவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தனது வீட்டிலிருந்து சைக்கிளில் ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வருகை புரிந்தார்.

சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க காடம்பாடி பகுதியில் உள்ள ஆட்சியர் முகாம் அலுவலகம் அலுவலகத்தில் இருந்து, நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், 3 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்தடைந்தார்.

மாவட்ட ஆட்சியரோடு அதிகாரிகளும் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்தடைந்தனர். சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க உள்ளூரில் இருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் வாகனம் வைத்திருக்கும் பொதுமக்கள் அனைவரும் காலை மாலை என இரு வேலை சுமார் 5 அல்லது 10 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கூறினார். மாவட்ட ஆட்சியர் சைக்கிளில் வருவதை கண்ட பொது மக்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர்.

Updated On: 8 Dec 2021 11:21 AM GMT

Related News