/* */

சுற்றுலாதொழில் முனைவோர், தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு ஆக. 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு..!

சுற்றுலாத்தொழில் முனைவோர், தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு ஆக. 15க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சுற்றுலாதொழில் முனைவோர்,  தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு ஆக. 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு..!
X

Tamilnadu Tourism Award-தமிழ்நாடு சுற்றுலா விருது (மாதிரி படம்)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தொழில் முனைவோர்கள் தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு 15.08.2023 -க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

2021-22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 30 முக்கிய முயற்சிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலாத்தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது அத்தகைய முக்கிய அறிவிப்பாகும். தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத்தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கவுள்ளது.

இந்த விருதுகள் சுற்றுலாத்தொழில் முனைவோரையும், மாநிலத்தில் சுற்றுலா தொடர்புடைய செயல்பாடுகளைச் செயற்படுத்தும் சுற்றுலாத்தொழில் புரிவோரையும் ஊக்குவிக்கும். இந்த விருதுகள் பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும். பின்வரும் 15 வெவ்வேறு பிரிவுகளில் உள்ள விருதுகளின் இரண்டாம் பதிப்பு 27/09/2023 அன்று வழங்கப்படும்.

விருது வகைகள் பின்வருமாறு:

  1. வெளிநாட்டினருக்கான சுற்றுலா ஆப்ரேட்டர்
  2. உள்நாட்டு சுற்றுலா ஆப்ரேட்டர்
  3. சிறந்த பயண பங்குதாரர்
  4. சிறந்த விமான பங்குதாரர்
  5. சிறந்த தங்குமிடம்
  6. சிறந்த உணவகம்
  7. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக விடுதி
  8. சிறந்த முக்கிய சுற்றுலா ஆப்ரேட்டர்
  9. சிறந்த சாகச சுற்றுலா மற்றும் முகாம் தள ஆப்ரேட்டர்
  10. சிறந்த கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடு மற்றும் கண்காட்சி அமைப்பாளர்
  11. சிறந்த சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்
  12. சிறந்த சுற்றுலா வழிகாட்டி
  13. தமிழ்நாட்டின் சிறந்த விளம்பரம்
  14. சிறந்த சுற்றுலா கையேடு.
  15. சிறந்த சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கல்வி நிறுவனம்

மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத்தொழில் முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று (27/09/2023) சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யலாம். சுற்றுலா விருதிற்கு 15.08.2023 -க்குள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 July 2023 7:00 AM GMT

Related News