காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி
X

மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற களத்தில் உள்ளவர்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 12ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக்கு 11உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 2பேரும் , வாலாஜாபாத் ஒன்றியத்தில் 2பேரும் , உத்திரமேரூர் ஒன்றியத்தில் 3பேரும் , ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 2பேரும் , குன்றத்தூர் ஒன்றியத்தில் 3என 11 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள். எனவே மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்வதில் கட்சி போட்டி என்பதில் எந்தவித சிக்கலும் இல்லை.

இந்த நிலையில் தலைவர் யார் என்ன என்பதில் இரு வேட்பாளர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் 1வது வார்டில் போட்டியிட்ட திருமதி. நித்யா சுகுமார் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஆரம்ப முதலே இறுதிவரை இருந்தார். இவருக்கு வாய்ப்பு தருவார்கள் காஞ்சிபுரம் திமுகவினர் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

ஆனால், குன்றத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் அப்பகுதியில் உள்ள மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தீவிர விசுவாசி. எனவே, இவருக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்ட பின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு யாருக்காவது ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எண்ணியிருந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் வெற்றி பெற்றவரை அமைச்சராக நியமித்தது. இதில் ஏமாற்றமடைந்த காஞ்சிபுரம் மாவட்ட கட்சியினர், மாவட்ட ஊராட்சி தலைவர் காஞ்சிபுரத்தில் நியமிக்கப்படுவாரா? என பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.


Updated On: 14 Oct 2021 3:30 PM GMT

Related News