/* */

காஞ்சிபுரத்தில் பறிமுதல் செய்யப்படும் பொருட்களை திரும்ப பெற சிறப்பு குழு

காஞ்சிபுரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்படும் பொருட்களை திரும்ப பெற சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் பறிமுதல் செய்யப்படும் பொருட்களை திரும்ப பெற சிறப்பு குழு
X

காஞ்சிபுரம் பறக்கும் படையினால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை சரி பார்க்கும் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி. (கோப்பு படம்)

இந்திய நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அன்றே அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 பறக்கும் படைகளும் 12 நிலை கண்காணிப்பு குழுக்களும் மற்றும் நான்கு காணொளி காட்சி குழுக்களும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் இதற்கான பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

அவ்வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தனியார் தங்க நகை நிறுவனத்திற்கு சொந்தமான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு அதற்கான ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல் மூன்று இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை சரி பார்க்கும் பணி மற்றும் ஒப்படைக்கும் பணி என பல பணிகளும் காலதாமதமாக இதற்கென சிறப்பு குழுக்கள் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.


இதனை ஏற்ற காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரால் சிறப்பு கண்காணிப்புக்குழு இன்று அமைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருட்களை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து திரும்ப பெற ஏதுவாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மூன்று அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இக்குழுவில் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மற்றும் செலவின கண்காணிப்பு ஒருங்கிணைப்பாளர் புஷ்பா , மாவட்ட கருவளர் அலுவலர் அருள்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் இவர்களை தொடர்பு கொள்ளும் வகையில் செலவின கண்காணிப்பாளர் புஷ்பா அவர்களை 94433 95125 என்னில் தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பொருட்களை திரும்பி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 21 March 2024 9:57 AM GMT

Related News