/* */

ரூ104 கோடி மதிப்பிலான நீர்நிலை நிலங்கள் மீட்பு - அதிரடியில் வட்டாட்சியர்கள்

நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம் மேற்கொண்டு வந்த நிலங்கள் வட்டாட்சியர்களால் அதிரடியாக மீட்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

ரூ104  கோடி மதிப்பிலான நீர்நிலை நிலங்கள் மீட்பு - அதிரடியில் வட்டாட்சியர்கள்
X

முட்டவாக்கம் பகுதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வந்த நிலங்கள் மீட்கப்பட்ட போது.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழகம் முழுவதும் ஆறு,ஏரி,குளம், உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்கும் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலை ஆதாரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டெடுக்கும் பணி மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவின்படி நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட வதியூர், முட்டவாக்கம், பெரும்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளில் பல ஆண்டுகாலமாக ஆக்கிரமிப்பு செய்து பயிரிடப்பட்டு வந்துள்ளது.

இதனை கணக்கெடுப்பு ஆய்வு மூலம், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை கண்டுபிடித்த நிலையில், இன்று காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி தலைமையில், காஞ்சிபுரம் தாசில்தார் பிரகாஷ், பொதுப்பணித்துறை இளம் பொறியாளர் மார்க்கண்டேயன், மற்றும் வருவாய்த்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வதியூர் ஏரியில் 50 ஏக்கரும், முட்ட வாக்கம் ஏரியில் 25 ஏக்கரும், பெரும்பாக்கம் ஏரியில் 60 ஏக்கரும் என மொத்தம் சுமார் 37 கோடி ரூபாய் மதிப்பிலான, 135 ஏக்கர் ஏரி புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தி ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் மீட்டு எடுத்தனர்.

ஏரி நிலங்களை அதிகாரிகள் மீட்டெடுக்கும் கடும் பணியினால் கிராமப்புற ஆக்கிரமிப்பாளர்களில் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த ஓரு வாரத்தில் மட்டும் ரூ104 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Updated On: 25 March 2022 12:52 PM GMT

Related News