/* */

காஞ்சிபுரம் : பேருந்து நிலைய சாலை செப்பனிடும் பணி தீவிரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது போக்குவரத்து சில நாட்களில் துவங்க உள்ள நிலையில் பேருந்து நிலைய சாலையினை செப்பனிடும் பணி துவங்கியுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : பேருந்து நிலைய சாலை செப்பனிடும் பணி தீவிரம்
X

காஞ்சிபுரம் பேருந்து நிலைய சாலை செப்பனிடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் அதிகரித்து இருந்ததால் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது .

இந்நிலையில் கடந்த வாரம் பல மாவட்டங்களில் முழுவதும் தொற்று பாதிப்பு குறைந்து காணபட்டு வருவதால் பொதுபோக்குவரத்து துவங்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்நிலையில் தமிழக முதல்வர் இன்று கொரோனா தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க உள்ளார். இதில் அரசு பேருந்துகள் இயக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வருகிறது.

இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்க தயார் நிலையில் உள்ளதாகவும்‌, முதல்கட்டமாக காஞ்சிபுரம் பேருந்து நிலைய சாலைகளை செப்பனிடும் பணியினை பெருநகராட்சி இன்று துவக்கியுள்ளது.

பழுதைடைந்த பகுதிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் எடுக்கப்பட்டு புதிய சாலை அமைக்க‌ பணிகள் நடைபெற்று வருகின்றன.

Updated On: 20 Jun 2021 4:45 AM GMT

Related News