/* */

பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' 100வது நாள் நிகழ்ச்சி : விஷார் பகுதி மக்கள் மகிழ்ச்சி

கடந்த 2014 விஜயதசமி அன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களுடன் உரையாடும் நிகழ்ச்சியான மன் கி பாத் தொடங்கப்பட்டது.

HIGHLIGHTS

பிரதமர் மோடியின் மனதின் குரல் 100வது நாள் நிகழ்ச்சி : விஷார் பகுதி மக்கள்  மகிழ்ச்சி
X

பாரத பிரதமரின் மன் கீ பாத் நூறாவது நிகழ்ச்சியினை கண்டுகளிக்கும் விஷார் பகுதி பொதுமக்கள்.

பாரத பிரதமரின் நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சி கொண்டாடும் வகையில் விஷார் ஊராட்சியில் சிறப்பு ஏற்பாடுகளை பாஜக மாவட்ட துணைத் தலைவர் செய்திருந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விஷார் ஊராட்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த நூறாவது நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு பாஜக மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார் தலைமையில் தனியார் மண்டபத்தில் காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என கலந்து கொண்டு பிரதமரின் மனதின் குரல் 100வது நாள் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். அவர்கள் இலகுவாக பார்க்கும்வகையில் மிகப்பெரிய எல் இ டி திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந்நிகழ்ச்சி கடந்த 2014இல் விஜயதசமி அன்று பொதுமக்களுடன் கலந்துரையாடும் மன் கீ பாத் எனும் மனதில் குரல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. குஜராத் முதல்வராக இருந்தபோது நரேந்திர மோடி பல்வேறு கட்டங்களில் பொதுமக்களுடன் அதிக அளவில் நேரடி சந்திப்புகளை நடத்திய நிலையில் பாரத பிரதமரான பின் இதற்கான வழியினை இந்நிகழ்ச்சி மூலம் மீண்டும் தொடங்கினார்.

இதன் மூலம் நாட்டு மக்களின் செயல்களை மனதார பாராட்டும் வகையில் அது அனைவருக்கும் உத்வேகமாக இருக்கும் எனவும் எதிரி நண்பன் என்றில்லாமல் அவர்களின் நல்ல இயல்புகளை எடுத்து வைக்கும் நோக்கில் இதில் அனைவரின் செயலையும் மனதார பாராட்டினார்.

மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் மிகச் சிறப்பாக செயல்கள் மூலம் மக்களின் கவனத்தை பேசி திருப்பும் செயல்கள் வியப்பை அளிக்கிறதாகவும் இறைவனை காண பூஜை தட்டுடன் செல்வது போல் பாரத பிரதமர் ஆகிய நான் உங்களிடம் மனதின் குரல் மூலம் நேரடியாக உங்கள் செயல்களை கேட்டு அறிகிறேன்.


நீர் நிலைகளை சுத்தம் செய்தல் சுற்றுப்புற சூழல் பாதுகாத்தல் அரசு செயல் திட்டங்களை தவறாது பயன்படுத்துதல் பெண்களுக்கான கல்வி பாதுகாப்பு உள்ளிட்டவைகளை ஊக்கப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை மிக அற்புதமாக கையாண்டு அனைவரையும் அதிசய வைக்கும் செயல் தன்னை பிரமிக்க செய்கிறதாகவும் இதில் தெரிவித்தார்.

மேலும் பல்வேறு மாநிலங்கள் பல்வேறு வகையான தொழில்கள் குறித்து அவர்கள் முன்னேற்ற பாதையில் இட்டு செல்லும் டிஜிட்டல் இந்தியா குறித்து பிரதமரின் உரையை கேட்டு அறிந்து கண்டு களித்தனர்.

அந்த வகையில் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து ஒளிபரப்பான நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் அனைவரும் மலர் தூவி வரவேற்று மகிழ்ச்சி உற்றனர்.

இவ்வாறு மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக பாரத பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடம் நேரடியாக உரையாற்றுவது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றும், கிராமபுற, நகர்ப்புற மக்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருவதாகவும் இவற்றை பொதுமக்கள் ஒன்று கூடி ஒரே இடத்தில் கண்டு களிக்கும் வகையில் விஷார் ஊராட்சியில் எல்இடி திரை கொண்டு சிறப்பு ஏற்பாடு செய்திருந்த பாஜக மாவட்ட துணை தலைவர் செந்தில்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டினை தெரிவித்தனர்.

Updated On: 30 April 2023 1:15 PM GMT

Related News