/* */

5 ஓன்றியங்களிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நிறைவுபெற்றது. வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார் நிலையில் உள்ளது.

HIGHLIGHTS

5 ஓன்றியங்களிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார்
X

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடத்த, தயார் நிலையில் வாக்கு எண்ணிக்கை மையம் உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் , வாலாஜாபாத் , உத்திரமேரூர் , ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் என 5 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் இரு கட்டங்களாக நிறைவு பெற்றது.இதில் 5 ஒன்றியங்களிலும் நடைபெற்ற வாக்குபதிவில் 5 லட்சத்து 34 ஆயிரத்து 130 வாக்குகள் பதிவாகி உள்ளது.

பதிவான வாக்கு பெட்டிகள் அனைத்தும் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் காரப்பேட்டை அண்ணா பொறியியல் உறுப்புக் கல்லூரியிலும் , வாலாஜாபாத் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் ஏனாத்தூர் சங்கரா கலை அறிவியல் கல்லூரியிலும் , உத்திரமேரூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் திருப்புலிவனம் எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரியிலும் , ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியிலும் , குன்றத்தூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் மாங்காடு ஸ்ரீ முத்துக்குமரன் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்தின் அனைத்துப் பணிகளும் தற்போது நிறைவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் குடிநீர், தடையில்லா மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் , வாக்கு எண்ணிக்கை தெளிவாக முகவர் கண்காணிக்க ஏதுவாக இடவசதி , மின்விசிறி உள்ளிட்டவைகள் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்தை கண்காணிக்க அறை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வாக்குப் பெட்டிகள் எண்ணும் அறை சுற்றி கம்பிவேலி அமைக்கப்பட்டு பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Updated On: 10 Oct 2021 4:00 AM GMT

Related News