/* */

அரசு விதிகளை மீறி பிளாஸ்டிக் பொருட்கள்: இரு கடைகளுக்கு ரூ.15000 அபராதம்

ஏனாத்தூரில் அமைந்துள்ள மளிகை கடை மற்றும் உணவகத்தில் அரசு தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அரசு விதிகளை மீறி பிளாஸ்டிக் பொருட்கள்: இரு கடைகளுக்கு ரூ.15000 அபராதம்
X

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருந்ததை கண்ட மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் செல்வகுமார் டிடி ஆயில் மேற்கொண்டு பொருட்களை பறிமுதல் செய்த போது.

தமிழ்நாடு முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நலன் கருதி பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்க பல்வேறு துறைகளில் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து திருமதி விழிப்புணர்வு நாடகங்கள் விழிப்புணர்வு பேரணிகள் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே ஏற்படுத்தப்பட்டு கிராம ஊராட்சிகள் சார்பாகவும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது திமுக அரசு வந்த பிறகு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க மீண்டும் மஞ்சப்பை எனும் வாசகத்தை முன் நிறுத்தி விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் மஞ்சப்பை பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு துறை சார்பில் வழங்கப்பட்டு அதனை பயன்பாட்டுக்கு எடுத்து வர அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் பிளாஸ்டிக் பயன்பாடு தடை விதிக்கபட்டு இதனை மீறி விற்பனை செய்யும் பொருட்களை பறிமுதல் செய்வது மட்டுமல்லாமல் அதை விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது

அவ்வப்போது மாநகராட்சி பேரூராட்சி அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் , காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் இன்று நம்ம ஊரு சூப்பர் திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரால் தொடங்க வைக்கப்படுகிறது.

அங்கு விழா நடைபெறும் இடத்தை கருகி செயல்பட்டு வந்த மளிகை கடை ஓட்டல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை பொருட்கள் வாங்கி செல்வதை கண்ட காஞ்சி மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை அலுவலர் செல்வகுமார் அதிரடியாக அந்த பகுதி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அந்த கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு இருந்ததை கண்டறிந்து அதனை அதிரடியாக பறிமுதல் செய்து அந்த இரு கடைகளுக்கும் ரூபாய் 15,000 அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் அப்பகுதியில் உள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். இதனால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 9 May 2023 9:45 AM GMT

Related News