/* */

6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து ஆலோசனை முகாம்

எடை குறைவு, மெலிவு தன்மை, குள்ள தன்மை நிலையில் உள்ள குழந்தை தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வுகள் அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து ஆலோசனை முகாம்
X

ஊட்டச்சத்து குறித்து தாய்மார்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி எடுத்துரைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் இன்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் 0-6 வயது குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை முகாமினை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் கடுமையான எடை குறைவு, மெலிவு தன்மை, குள்ள தன்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வுகள் பற்றி விவரிக்கப்பட்டது. மேலும் ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) பிரியாராஜ், மாவட்ட திட்ட அலுவலர் மு.கிருஷ்ணவேணி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளனர்.

Updated On: 13 May 2022 12:15 PM GMT

Related News