/* */

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை பெண்கள் விடுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை பெண்கள் விடுதிகளில் அமைச்சர்கள் கணேசன், தா.மோ. அன்பரசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை பெண்கள் விடுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு
X

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் உள்ள பெண்கள் விடுதியில் அமைச்சர்கள் கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பெண்களுக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றும் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

இதில் பூந்தமல்லியில் செயல்பட்டு வரும் விடுதியில் தங்கியிருந்த பெண்களுக்கு தீடிர் உடல் உபாதையில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு வீடு திரும்பிய நிலையில் , 8பேர்களின் உடல் நிலை குறித்து விடுதி நிர்வாகமோ , தொழிற்சாலை நிர்வாகமோ தெரிவிக்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் 18 மணி நேரம் நடைபெற்றது.

அந்நிலையில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் ஆகியோர் அளித்த வாக்குறுதியின் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதனையடுத்து இன்று அமைச்சர்கள் இருவரும் காஞ்சிபுரம் அடுத்த கோளிவாக்கம் மற்றும் கீழம்பி பகுதியில் இயங்கும் பெண்கள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த விடுதியில் உள்ள பெண்கள் தங்கும் அறைகள், உணவு கூடம் , குடிநீர் கழிவறைை , பாதுகாப்பு மற்றும் பிற வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அறைகளில் தங்கும் நபர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், அடிப்படை வசதிகளில் எவ்வித குறைபாடுகளும் இனி வரக் கூடாது எனவும் அறிவுரை வழங்கினார்.

அதன்பின் மாவட்ட ஆட்சியர் , எஸ்பி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி , காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் , சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Dec 2021 10:30 AM GMT

Related News