/* */

காஞ்சிபுரம் ஜெயின் சங்கத்தின் சார்பில் மகாவீர் ஜெயந்தி பேரணி

மகாவீர் ஜெயந்தியை ஒட்டி நடைபெற்ற பேரணியில் அவரது கொள்கையை விளக்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் ஜெயின் சங்கத்தின் சார்பில் மகாவீர் ஜெயந்தி பேரணி
X

மகாவீர் ஜெயந்தியை ஒட்டி காஞ்சிபுரம் ஜெயின் சங்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் துவக்கி வைத்த போது.

காஞ்சிபுரம் ஜெயின் சங்கம் சார்பில் மகாவீர் ஜெயந்தி ஒட்டி நடைபெற்ற புலால் உணவை தவிர்க்க நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் துவக்கி வைத்தார்.

இந்தியா முழுவதும் இன்று மகாவீர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வர்தமானர் என்ற இயற்பெயருடன் பிறந்து, வளர்ந்தவர் மகாவீரர். இவர் தனது அரசு வாழ்வு, மனைவி, அரண்மனை சுக போகங்கள் ஆகியவற்றை துறந்து துறவி வாழ்க்கை மேற்கொண்டார்.

அன்பையும் அகிம்சையையும் போதித்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மிக துறவிகளில் மகாவீரரும் ஒருவர். மகாவீரர் அன்பு, வாழ்க்கை, அமைதி பற்றி அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும், எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில் போதனைகளை வழங்கி உள்ளார்.

எந்த உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தாமல் இருத்தல், உண்மையை மட்டுமே பேசுதல், திருடாமை, பாலுணர்வு கொள்ளாமை, செல்வங்கள் மீது பற்று கொள்ளா இருப்பது ஆகிய ஐந்தும் ஜைன மதத்தின் உறுதிமொழிகளா இன்று வரை உபதேசிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் ஜெயின் சங்கம் சார்பில் செங்கழுநீர் ஓடை வீதியில் உள்ள ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு அவரின் கொள்கைகளை விளக்கும் வகையில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், பாவாஜி மடாதிபதி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்தப் பேரணி செங்கழுநீரோடை வீதி, பூக்கடை சத்திரம், கிழக்கு ராஜவீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மகாவீர் கொள்கைகளை எடுத்துரைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சென்றனர்.

இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஜெயின் சமூகத்தினை சேர்ந்த ஆண் பெண் என இரு பாலரும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சங்குசாப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இதில் பொது மருத்துவம் கண் காது மூக்கு தொண்டை இருதயம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான கண்டறிதல் முகாம் மற்றும் சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் மருத்துவர்கள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வழங்கப்பட உள்ளது.

மேலும் ஏழை எளிய மக்களுக்கு ஜெயின் சங்கம் சார்பில் இலவச அன்னதானங்களும் வழங்கப்பட உள்ளது.

Updated On: 4 April 2023 4:45 AM GMT

Related News