/* */

காஞ்சிபுரம் அருகே ரூ.1.6 கோடி மோசடி செய்தவரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்

காஞ்சிபுரம் அருகே ரூ.1.6 கோடி மோசடி செய்தவரின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே ரூ.1.6 கோடி மோசடி செய்தவரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்
X

பொதுமக்களிடமிருந்து ரூ/ 1.6 கோடி பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறி அவரது வீட்டை முற்றுகையிட்ட முதலீட்டாளர்கள்/

காஞ்சிபுரம் அருகே நிலம், தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதாக கூறி பொதுமக்களிடம் சுமார் 1.6 கோடி மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன முன்னாள் உதவி மண்டல மேலாளர் வீட்டை முற்றுகையிட்ட முதலீட்டாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் அடுத்த புஞ்சைஅரசன் தாங்கல் முருகேசனார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் மாங்கால் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஈஸ்ட் விண்ட் புட்வேர் நிறுவனத்தில் கடந்த 14 வருடங்களாக மண்டல பொது மேலாளராக பணிபுரிந்த வந்த நிலையில் இவர் மீது நிறுவனம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க எடுத்து கடந்த 2021 செப்டம்பர் மாதம் பணி நீக்கம் செய்துள்ளது.

இந்நிலையில் இவருடன் நெருங்கி பழகிய தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களிடம் பேசி நிலம் மற்றும் தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்து வருவதாகவும், அதில் தங்கள் பணத்தை முதலீடு செய்தால் பத்து சதவீத வட்டி மற்றும் இலாபம் தருவதாக கூறி சுமார் 50 நபர்களிடம் ஒரு கோடியே 60 லட்சம் பணம் பெற்று அதற்கு ஸ்டாம்ப் பேப்பரில் பணம் பெற்றுக் கொண்டதற்கும் அதற்கு உத்தரவாதம் எனவும் எழுதியும் அளித்துள்ளார்.

பணம் பெற்ற இரண்டு மாதங்கள் மட்டுமே அதற்கான வட்டி செலுத்தியதும் அதன் பின் வட்டி தராமல் காலம் தாழ்த்தி வந்ததும், இதைக் கேட்ட நபர்கள் மீது காவல்துறையில் அவர் மீது புகார் அளித்தும் வந்தனர். இவர் பூந்தமல்லி சாலையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறியதும் பின்னர் தெரிந்துள்ளது.

இந்நிலையில் இன்று அவர் வீட்டில் இருப்பதாக அறிந்த முதலீட்டாளர்கள் அவரை சந்திக்க நேரில் செல்வதாக அறிந்து தனது வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் சென்று விட்டார்.

இதை அறியாத முதலீட்டாளர்கள் அங்கு சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் காலையில் இருந்தே வீடு பூட்டி உள்ளதாகவே அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இது குறித்த புகார்கள் காஞ்சி தாலுகா காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் , முதல்வர் தனிப்பிரிவு ஆகியவற்றில் புகார் தெரிவித்தும் எந்தவித பயனும் இல்லை என்பதால் இன்று அவரை வீட்டில் சந்திக்க திட்டமிட்டு சென்றபோது அவர் இல்லை என்பதும் எங்களிடம் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அளித்த பணத்தை திருப்பி கேட்டு வருவதால் உடனடியாக இதன் மேல் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் எனவும் முதலீட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் அவர்கள் கூறுகையில் கடந்த ஜனவரி மாதம் தான் சென்னை டி நகர் பகுதியில் 3 கோடி ரூபாய் அளவில் மதிப்பிலான சொத்து ஒன்றை ஜனார்த்தனன் வாங்கியதும் பொதுமக்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. திடீரென 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீட்டின் முன்பு கூட கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 27 Dec 2022 6:24 AM GMT

Related News