/* */

புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நகை வியாபாரிகள் கடையடைப்பு

மத்திய அரசு புதிய ஹால்மார்க் விதிகளை அமல்படுத்தியதை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட நகை மற்றும் அடகு வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

HIGHLIGHTS

புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து  நகை வியாபாரிகள் கடையடைப்பு
X

புதிய ஹால்மார்க் விதிகளை திரும்பப் பெறக் கோரி கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட நகை வியாபாரி சங்கத்தினர்.

இந்திய தர நிர்ணய ஆணையம் நகைக்கடை வாயிலாக விற்கப்படும் தங்க நகைகளுக்கு புதிய ஹால்மார்க் தர அடையாள எண் கொண்ட நிரந்தர முத்திரை பெற வேண்டும் என கட்டாயமாக்கியுள்ளது. தற்போது தர முத்திரை வழங்கும் மையங்கள் போதிய வசதியும் சாதனங்களும் இல்லை . நாளொன்றுக்கு ஆல் ஆல் மார்க் முத்திரை வழங்கும் மையங்களில் திறன் தினமும் 2 லட்சம் நகைகள் மட்டுமே எனவும் சென்னையில் இரண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் இது எவ்வாறு சாத்தியம் எனும் நகைக்கடை உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் மோகன்லால் குப்தா கூறுகையில், தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரையை எதிர்க்கவில்லை, வரவேற்கிறோம். ஆனால் அடையாள எண்ணை பெறுவதில் பெரும் நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வியாபாரம் படு பாதாளத்தில் செல்லும். அரசு இதை கவனத்தில் கொள்ளவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நகை வியாபாரிகள் மற்றும் அடகு வியாபாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து மூன்று மணிநேர கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறோம்.

புதிய ஹால்மார்க் விதிகளான HUID திரும்பப் பெறும் வரை போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர். இப்போராட்டம் காரணமாக காஞ்சிபுரம் நகர் முழுவதும் நகைகடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

Updated On: 24 Aug 2021 9:40 AM GMT

Related News