/* */

ஆரோக்கியமான குழந்தை கண்டறிதல் திட்டத்தை துவக்கி வைத்த ஆட்சியர் ஆர்த்தி

தமிழக அங்கன்வாடிகளில் பயிலும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கண்டறியும் திட்டம் முகாம் வரும் மார்ச் 27தேதி வரை நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ஆரோக்கியமான குழந்தை கண்டறிதல் திட்டத்தை துவக்கி வைத்த ஆட்சியர் ஆர்த்தி
X

கீழம்பி அங்கன்வாடி மையத்தில் ஆரோக்கிய குழந்தைகளை கண்டறியும் திட்டத்தின் கீழ் குழந்தைகளின் எடை மற்றும் உயரம் அளவீடு செய்வதை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் கணக்கெடுத்து அவர்களின் ஊட்டச்சத்து நிலையை கண்டறியும் முகாம் இன்று முதல் துவங்கி வரும் 27ஆம் தேதி வரை அனைத்து அங்கன்வாடி மையங்களில் நடைபெறுகிறது.

இம் முகாம் துவக்க விழா காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழம்பி அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி துவக்கி வைத்து குழந்தைகளின் எடை உயரம் ஆகியவற்றை கணக்கில் செய்வதை ஆய்வு செய்தார்.

இம்முகாமில் குழந்தைகளின் சராசரி உயரத்திற்கு ஏற்ப அவர்களின் எடை இருப்பதை உறுதி செய்தல், இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கி ஆரோக்கியமான குழந்தையை வளர்ப்பது நோக்கமாகும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 77535 குழந்தைகளின் ஆரோக்கிய நிலை இம்முகாம் மூலம் கண்டறியப்படும்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர் சற்குணா , காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மலர்கொடி குமார், துணி பெருந்தலைவர் திவ்யபிரியா இளமது, திமுக ஒன்றிய செயலாளார் பி.எம்.குமார் , ஒன்றியக்குழு உறுப்பினர் விமல், ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜசேகர் மற்றும் மருத்துவர் காமாட்சி மற்றும் குழந்தைகளின் பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 March 2022 7:45 AM GMT

Related News