Begin typing your search above and press return to search.
குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை: எம்எல்ஏ வழங்கினார்

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே. மணிக்கண்ணன், திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.2ஆயிரம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்த கொரோனா நிவாரண தொகையின் முதல் தவணைத் தொகை ரூபாய் 2000 வழங்கும் பணியை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே. மணிக்கண்ணன் திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தொடங்கி வைத்தார். இவருடன் திருநாவலூர் கூட்டுறவு வங்கி செகரட்டரி அருணாச்சலம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், கூட்டுறவு சங்க தலைவர் சம்பத், ஒன்றிய கவுன்சிலர் முருகானந்தம், பி.ஆர்.வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.