கள்ளக்குறிச்சி அருகே விவசாயிகள் - விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி அருகே விவசாயிகள் - விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS

நிறைமதி கிராமத்தில் விவசாயிகள் விஞ்ஞானிகள் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தில் விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வேல்விழி தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம் முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் நடராஜன் வரவேற்றார். கால்நடைத்துறை திட்டங்கள் குறித்து மருத்துவர் பெரியசாமி பேசினார். காள சமுத்திரம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் சாமியா சிறப்புரையாற்றினார்.
வாழவச்சனூர் வேளாண்மை அறிவியல் கல்லூரி விஞ்ஞானிகள் ஏஞ்சல், அருண் ஆகியோர் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். விவசாயிகள் வேளாண்மை அட்மா திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் பழனிசாமி அலுவலர்கள் சக்திவேல் செய்திருந்தனர். வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.