/* */

நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்: சிபிஎம் கண்டனம்

பிரதமரிடம் பேசி மழை வெள்ள நிவாரணத்தை பெற்று, இந்த பொங்கல் விழாவையொட்டி குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

HIGHLIGHTS

நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்: சிபிஎம் கண்டனம்
X

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிபிஎம் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கே.பாலகிருஷ்ணன் 

சிறுபான்மை மக்கள் மீது நாடு முழுவதும் நடத்தப்படும் தாக்குல் கடும் கண்டனத்துக்குரியது என சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிபிஎம் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மீது கொலை வெறித்தாக்குதலை நடத்தி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் தினத்தன்று உத்தரபிரதேசம் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சர்ச்சுகளை இடித்துத் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.ஏசு சிலையை உடைப்பது பாதிரியார்கள் மீது தாக்குதல் என கொடூரமான மிருகத்தனமான தாக்குதலை தொடுத்திருக்கிறார்கள்.

அதே போல ஹரித்துவார் என்ற இடத்தில் இந்துக்கள் பாராளுமன்றம் என்ற பெயரில் மடாதிபதிகள் நடத்தியிருக்கிற அந்த மாநாட்டில் மிகக்கேவலமாக கொடூரமாக சிறுபான்மை மக்களை தாக்குவது என்று பேசியிருக்கிறார்கள். நாங்கள் ஒவ்வொருவரும் நூற்றுக்கணக்கான முஸ்லீம்களை கொலை செய்வோம் என்று பகிரங்கமாக பேசியிருக்கிறார்கள்.முஸ்லீம் பெண்களை பாலியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவார்கள் எனவும் பேசியிருக்கிறார்கள். அவர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றுவோம் என்று மதவெறியுடன் கூறுகின்ற நிலைமை இந்தியாவில் ஏற்பட்டு உள்ளது.

இது மிகுந்த கவலை அளிக்கக்கூடிய நிகழ்வு. காலம் காலமாக மக்கள் ஒற்றுமையுடன் வாழும் மதசார்பற்ற இந்திய நாட்டில் பாஜக, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவாரங்கள் கொலைவெறியோடு பேசுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டிக்கிறேன். ஆனால் பிரதமர் நரேந்திரமோடி ஒரு வார்த்தை கூட கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. ஹரித்துவாரில் பேசிய பேச்சு குறித்து காவல்த்துறையினர் சாதாரணமாக ஜாமீனில் வெளிவருகிற வழக்குகளை போட்டுள்ளனர்.

இந்த கொலை வெறிச்சம்பவங்களுக்கு பின்னணியில் மத்திய பாஜக அரசாங்கமே இருக்கிறது என்று நாங்கள் பகிரங்கமான குற்றம் சாட்டுகிறோம். எனவே இந்திய நாடு முழுவதும் உள்ள மதசார்பற்ற சக்திகள் எல்லாம் ஒன்றிணைந்துது பெரும்பான்மை சிறுபான்மை என்று மக்களை பாகுபடுத்தி கொலைவெறி தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும். இதை தடுத்து நிறுத்துவதில் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது.

தமிழ்நாட்டில் திமுக தலைமையில் எல்லா மதசார்பற்ற கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். அதே போல நாடு முழுவதும் இருக்கிற காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எல்லா மதசார்ப்பற்ற கட்சிகளும் ஒன்று சேர்ந்து நாட்டுக்கு ஏற்பட்டிருக்கிற பேராபத்தை தடுத்து நிறுத்த முன் வர வேண்டும்.எதிர்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக பாஜக பலரையும் களத்தில் இறக்கிவிட்டுள்ளது. மம்தா பானர்ஜியும் அதற்கு துணை போவது போல் தான் தெரிகிறது.

தமிழக முதல்வர் பொங்கல் பரிசுத்திட்டத்தை அறிவித்துள்ளார். மழை வெள்ளம் வந்திருக்கிற சூழ்நிலையில் அவர்களுக்கு நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. நிதி நெருக்கடி கடுமையாக உள்ளது என்பது உண்மை தான். அதிமுக கஜானாவை காலி செய்து போயுள்ள நிலை உள்ளது. இருந்தாலும் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் கொடுக்க மறுத்துள்ளது. பிரதமர் மோடி வருகிற 12ம் தேதி வருவதாக அறிவித்துள்ளார்.

எனவே, பிரதமரிடம் பேசி மழை வெள்ள நிவாரணத்தை பெற்று, இந்த பொங்கல் விழாவையொட்டி குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க முன்வரவேண்டும். சமீபத்தில் அதிமுக ஊழல்கள் குறித்து திமுக நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் 20 கோடி பெறுமானமுள்ள அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்தது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்படி தனியாருக்கு அதிகாரிகள் மட்டுமே பட்டா போட்டுக் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. அந்த அதிகாரிகளுக்கு பின்னால் இருந்து கட்டாயப்படுத்தியது யார்? அரசியல் செல்வாக்குள்ள உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் யாரும் சொல்லாமல் இந்த 109 ஏக்கர் நிலத்தை எப்படி பட்டா போட்டுக் கொடுக்க முடியும்.அதிமுக ஆட்சியின் போது இப்படி பல்வேறு மாவட்டங்களில் அரசு நிலத்தை பட்டா போட்டுக்கொடுத்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.என்றாக் கே.பாலகிருஷ்ணன்.

பேட்டியின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச்செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Dec 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...