/* */

ஒற்றுமைக்கு வித்திட்ட மீன்பிடி திருவிழா; 10 கிராமத்தினர் ஒன்றுகூடி மகிழ்ச்சி

ஒற்றுமையை வளர்க்கும் மீன்பிடி திருவிழாவில் 500க்கும் மேற்பட்டோர் ஒற்றுமையுடன் மீன் பிடித்து மகிழ்ந்தனர்.

HIGHLIGHTS

ஒற்றுமைக்கு வித்திட்ட மீன்பிடி திருவிழா; 10 கிராமத்தினர் ஒன்றுகூடி மகிழ்ச்சி
X

மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்ட கிராம மக்கள்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது அடியனூத்து ஊராட்சி பகுதியில் உள்ளது பெருமாள் கோவில் பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சொந்த பந்தங்களை இணைக்கும் திருவிழா மற்றும் அருகில் உள்ள மற்ற சுற்று வட்டார கிராமங்களிடையே ஒற்றுமையை உருவாக்கும் மீன் பிடி திருவிழா பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர்மழையால் இப்பகுதியில் உள்ள குளத்தில் தண்ணீர் நிறைந்துள்ளது. தற்போது தண்ணீர் குறைந்தால் இன்று மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.

குளக்கரையில் அமைந்துள்ள கன்னிமர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய பின், ஊர் நாட்டண்மை வெள்ளை துண்டை வீசி மீன் திருவிழாவை தொடக்கினார். அப்போது கரைகளில் வலைகளுடன் நின்று இருந்த அனைத்து தரப்பு வயது ஆண்கள், பெண்கள் தண்ணீருக்குள் இறங்கி மீன்களை வலை போட்டு பிடித்தனர்.

இந்த திருவிழாவில் நல்லாம்பட்டி, பெருமாள் கோவில் பட்டி, வாழைக்காய் பட்டி, கண்ணா பட்டி,வேடபட்டி உட்பட 10 கிராமங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

குளத்தில் ஜிலேபி, கொறவை வகையான மீன்களை பிடித்து வீட்டிற்கு கொண்டு சென்றனர். இந்த மீன்பிடி திருவிழா இப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 8 Aug 2021 6:47 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!