/* */

ஶ்ரீ இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

நான்கு மணி அளவில் திறந்த சொர்க்கவாசல் வழியாக லக்குமி நாராயணப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

HIGHLIGHTS

ஶ்ரீ இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில்  சொர்க்கவாசல்   திறப்பு
X

சொர்க்கவாசல் வழியாக லக்குமி நாராயணப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

திண்டுக்கல் மாவட்டம் , பழனி ஶ்ரீ இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவத் திருக்கோயில்களில் அதிகாலை பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் நடைபெற்றது.பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான ஶ்ரீ இலக்குமி நாராயண பெருமாள் கோயிலில் அதிகாலை அருள்மிகு இலக்குமி சமேதர் நாராயணருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து நான்கு மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கருடாழ்வார் எதிர்சேவை புரிந்தார்.சொர்க்கவாசல் திறப்பின் போது கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.எனினும் விழா முடிந்த பிறகு பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பரமபதவாசல் வழியே சுவாமி எழுந்தருளிய பின் கருடாழ்வார் வாகனத்தில் நான்கு இரதவீதி உலா எழுந்தருளினார்.

இதேபோல பழனியை அடுத்துள்ள பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலிலும் பரமபத வாசல் திறக்கப்பட்டு அருள்மிகு அகோபில வரதராஜ பெருமாள் மற்றும் லட்சுமிதேவி ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சொர்க்கவாசல் ராப்பத்து என பத்து நாட்களுக்கு திறந்திருக்கும். நிகழ்ச்சியில் இணைஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Updated On: 13 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்