/* */

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 40 பயணிகளுடன் அரசு பேருந்து ஜப்தி

கோவைக்கு சென்ற அரசு பேருந்து திண்டுக்கல் வந்த போது நீதிமன்ற ஊழியர்களால் பயணிகளுடன் ஜப்தி செய்யப்பட்டது

HIGHLIGHTS

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 40 பயணிகளுடன் அரசு பேருந்து ஜப்தி
X

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 40 பயணிகளுடன் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்ட போது பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், செம்மடைப்பட்டி அருகே கடந்த 2016ம் ஆண்டு, அரசு பேருந்து எதிரே வந்த ஜீப் மீது மோதியதில் கருப்பாத்தாள் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட நீதி மன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த சிறப்பு சார்பு நீதிபதி மாதவ ராமானுஜர், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடாக 6 லட்சத்து 85 ஆயிரத்து 800 ரூபாய் தர வேண்டும் என கடந்த 25.01.2018 அன்று தீர்ப்பு வழங்கினார்.

ஆனால், போக்குவரத்து கழகம் சார்பில் இதுவரை நஷ்ட ஈடு வழங்காததால் கடந்த 12.08.21 அன்று நீதிபதி சாமுண்டீஸ்வரி அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, இன்று (15.09.21) பொன்னமராவதியில் இருந்து பயணிகளுடன் கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த போது நீதிமன்ற ஊழியர்கள் பயணிகளுடன் பேருந்தை ஜப்தி செய்தனர்.

இதனை தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் நீதிமன்ற ஊழியர்களின் அறிவுரையின் பேரில், பேருந்தை திண்டுக்கல் பைபாஸ் வரை எடுத்து சென்று, மாற்று பேருந்தில் பயணிகளை ஏற்றி விட்டு, பேருந்தை திண்டுக்கல் போக்கு வரத்து கழக அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். பயணிகளுடன் பேருந்தை ஜப்தி செய்த சம்பவம் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 15 Sep 2021 12:26 PM GMT

Related News