/* */

திண்டுக்கல்லில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி: வியாபாரிகள் வேதனை

கொரோனா ஊரடங்கு காரணமாக திண்டுக்கல்லில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி: வியாபாரிகள் வேதனை
X

திண்டுக்கல் பூ மார்க்கெட்

திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, ஏ.வெள்ளோடு உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் பூக்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு பயிரிடப்படும் பூக்கள், திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. இங்கு தினமும் 10 டன் அளவுக்கு விற்பனையாகும். மேலும் திருமணம், திருவிழா காலங்களில் 20 டன் அளவுக்கு பூக்கள் விற்கப்படும்.

திண்டுக்கலில் இருந்து தமிழகத்திற்கு பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி கேரளாவுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன . இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சீசன் காலத்தில் ஓரளவு லாபம் கிடைத்தது.

கடந்த 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் பூக்கள் விற்பனை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் அதிகாலை 5 மணி முதல் மாலை வரை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் பூமார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பூக்கள் விற்பனை குறைந்து விலையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது.

அதன்படி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.300 க்கு விற்ற மல்லிகைப்பூ நேற்று ரூ.75 விற்றது. அதேபோல் முல்லைப்பூ ரூ.30க்கும், கனகாம்பரம் ரூ.100 க்கும், ரோஜா ரூ.15 க்கும், கோழிக்கொண்டை ரூ.7க்கும், சம்பங்கி ரூ.5 க்கும், அரளி ரூ.10 க்கும், செவ்வந்தி ரூ.30க்கும் விற்பனையானது..தினமும் டன் கணக்கில் பூக்கள் விற்பனையாகாமல் தேங்கிக் குப்பையில் கொட்டப்படுகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

#instanews #tamilnadu #Flower # prices #very #down #Dindigul #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #திண்டுக்கல்லில் #பூக்கள்விலை #கடும்வீழ்ச்சி #Lowprice #lockdown #covid19 #Instanews #loss #Merchants

Updated On: 13 May 2021 11:25 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!