/* */

குழந்தைகள் மீதான சீண்டலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல்லில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தடுப்பு குறித்து, தனியார் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குழந்தைகள் மீதான  சீண்டலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு முகாம்
X

திண்டுக்கல் பள்ளியில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்,  ஏடிஎஸ்பி.லாவண்யா தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம், ஏடிஎஸ்பி.லாவண்யா தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்பி. சீனிவாசன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்த புகார் அதிகரித்து வருகிறது. உங்களுக்கோ, உங்கள் அருகாமையில் இருப்பவர்களுக்கோ, உங்களது உறவினர்களுக்கோ ஏதேனும் பாலியல் ரீதியான தொந்தரவு ஏற்பட்டால், உடனடியாக காவல் துறையினரை அல்லது மாவட்ட நிர்வாகத்தை தயக்கமின்றி தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம். புகார் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமி, மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, வேடசந்தூர் கல்வி அலுவலர் கீதா, டிஎஸ்பி.கோகுலகிருஷ்ணன் ஆய்வாளர் உலகநாதன், குழந்தை கடத்தல் தடுப்புப்பிரிவு ஆய்வாளர் செல்வகுமாரி, ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Dec 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?