/* */

போக்சோ வழக்கில் கைதான கல்லூரி தாளாளருக்கு ஜாமீன்: மகிளா நீதிமன்றம் உத்தரவு

தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனைத் தொடர்ந்து 2 போக்சோ வழக்கில் இருந்து ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்

HIGHLIGHTS

போக்சோ வழக்கில் கைதான கல்லூரி தாளாளருக்கு ஜாமீன்: மகிளா நீதிமன்றம் உத்தரவு
X

திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததான புகாரில் போக்சோ வழக்கில் கைதான கல்லூரி தாளாளருக்கு ஜாமீன் வழங்கி, மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

திண்டுக்கல் அடுத்துள்ள முத்தனம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் தாளாளராகவும் அரசியல்கட்சியின் நிர்வாகியாகவும் ஜோதி முருகன் இருந்து வருகிறார்.

இவர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி கடந்த மாதம் 19ஆம் தேதி கல்லூரி மாணவர்கள் திண்டுக்கல் - பழனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து 3 மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில், திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் 2 போக்சோ சட்டம் உள்பட 3 வழக்குகளை பதிவு செய்தனர்.

மேலும், இதற்கு உடந்தையாக இருந்த கல்லூரியின் விடுதி காப்பாளர் அர்ச்சனாவை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தலைமறைவான ஜோதிமுருகன் திருவண்ணாமலை போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து கடந்த வாரம் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஜோதிமுருகன் ஆஜர்படுத்தப்பட்ட அவரை பத்தாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி புருஷோத்தமன் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென ஜோதிமுருகன், மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து 2 போக்சோ வழக்கில் இருந்து ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து ஜாமீன் வழங்கிய நீதிபதி நாள்தோறும் வடமதுரை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென உத்தரவிட்டார்.


Updated On: 6 Dec 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!