/* */

பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம்

பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது போக்சோ குண்டர் சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும்

HIGHLIGHTS

பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம்
X

திண்டுக்கல்லில் காந்திய காமராஜர் மக்கள் தொண்டு அறக்கட்டளை சார்பாக பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் காந்திய காமராஜர் மக்கள் தொண்டு அறக்கட்டளை சார்பாக பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

திண்டுக்கல் காந்திய காமராஜர் மக்கள் தொண்டு அறக்கட்டளை சார்பாக கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில்‌ இன்று பெண் குழந்தைகள் பாலியல் தொல்லையிலிருந்து விடுபடவும்,பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது போக்சோ மற்றும் குண்டர் சட்டங்களைக் கொண்டுவந்து கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து தகவல்களை மறைப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என்றும் திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு வாகனம் புறப்பட்டு திண்டுக்கல் நகர் பகுதி முழுவதும் துண்டு பிரசுரம் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

28.12.2021 தொடங்கிய இந்த விழிப்புணர்வு இயக்கம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பத்து நாட்கள் நடக்கும் என தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிகள் காந்திய காமராஜர் மக்கள் தொண்டு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் தங்கத்தமிழகன் தலைமை தாங்கினார் உடன் வீரமணி ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் விழிப்புணர்வு இயக்க பேரணியில் கலந்துகொண்டனர்.

Updated On: 29 Dec 2021 1:45 AM GMT

Related News