/* */

விருத்தாசலம் அருகே ஊராட்சி தலைவியின் கணவரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் அருகே ஊராட்சி தலைவியின் கணவரை கண்டித்து கிராம மக்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

விருத்தாசலம் அருகே ஊராட்சி தலைவியின்  கணவரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

விருத்தாச்சலம் அருகே ஊராட்சி தலைவியின் கணவரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தனலட்சுமி அய்யாசாமி இருந்து வருகிறார்.

இந்த நிலையில் குப்பநத்தம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்களுக்கு மட்டும் 100நாள் வேலை வழங்கியதாகவும், மேலும் குடிநீர், தெருவிளக்கு, சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராமல் ஊராட்சி மன்ற கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் தலையிடுவதால் மக்களுக்கு சேர வேண்டிய பல்வேறு நலத்திட்ட உதவிகளை தடுத்து நிறுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டித்து குப்பாநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கிராம பொதுமக்கள் கைகளில் பதாகை ஏந்தி, கண்களில் கருப்பு துணி கட்டி ஊராட்சி மன்ற தலைவியின் கணவரையும், நடவடிக்கை எடுக்காத வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்குமாரியையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த விருத்தாசலம் காவல் உதவி ஆய்வாளர் ஆதி, பாக்யராஜ், உளவு பிரிவு பாலமுருகன், அபிப் இப்ராஹிம், பழனி உள்ளிட்ட காவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.

Updated On: 7 Oct 2021 6:51 AM GMT

Related News