/* */

கீழணையில் இருந்து சம்பா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

காட்டுமன்னார்கோயில் வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி நிலையில் இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

கீழணையில் இருந்து சம்பா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
X

கீழணை

கீழணையிலிருந்து கடலூர் மாவட்ட டெல்டா பகுதி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு சம்பா பருவ பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

கொள்ளிடம் வடக்கு ராஜன் வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், கஞ்சன் கொல்லை வாய்க்கால், வடவார்,தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் பாசனம் பெறும் கொள்ளிடம் தெற்கு ராஜன் வாய்க்கால், குமுக்கிமன்னியார் மற்றும் வினாயகன்தெரு வாய்க்கால் ஆகிய வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பாசன மதகுகளை திறந்து வைத்தனர்.

இதுபோல, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் இருந்தும் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ராதா மதகில் விநாடிக்கு 10 கன அடியும், வீராணம் புதிய மதகில் விநாடிக்கு 74 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.

Updated On: 29 Aug 2021 1:20 PM GMT

Related News