/* */

கடலூர் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

நிலுவையிலுள்ள 5 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி கடலூரில் கௌரவ விரியுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

கடலூர் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

கடலூரில் அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள அரசு பெரியார் கலைக்கல்லூரி வாயில் முன் கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கௌரவ விரிவுரையாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஐந்து மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்,அண்டை மாநிலமான கேரளா ஆந்திராவில் கௌரவ விரியுரையாளர்களுக்கு பல்கலைக்கழகம் மானியக்குழு பரிந்துரைத்த ஊதியம் வழங்குவது போல தமிழகத்திலும் வழங்க வேண்டும் அல்லது யூ.ஜி.சி. விதிகளுக்கு உட்பட்டு சட்டக்கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழக கெளரவ விரியுரையாளர்களுக்கு வழங்குவது போல மாத ஊதியம் ரூ 30,000/- வழங்க வேண்டும். கௌரவ விரியுரையாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கிட வேண்டும்,பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On: 29 Sep 2021 11:52 AM GMT

Related News