/* */

கடலூர் நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

கடலூர் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாலசுப்பிரமணியம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

கடலூர் மாவட்டம் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கி. பாலசுப்ரமணியம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் தோட்டப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் பணியை பார்வையிட்டார்.

தொடர்ந்து அணுகம்பட்டு பகுதியில் செயல்பட்டுவரும் நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு நெல் ஈரப்பதம் செய்யும் பணியினை ஆய்வு செய்தார் .

அப்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை தாமதமின்றி வாங்கி பாதுகாக்க வேண்டும். விவசாயிகள் சிட்டா மற்றும் ஆதார் எண்களை முறையாக பதிவு செய்து வரிசை சீட்டுகள் வழங்கப்பட்டு நெல் கொள்முதல் விரைவாக செய்ய வேண்டும். நாளொன்றுக்கு 1000 மூட்டைகளுக்கு மேல் பிடிக்கவேண்டும். மழை ஏற்பட்டால் நெல் மூட்டைகள் நனையாத வகையில் தார்பாய் போட்டு மூடி பாதுகாக்கவும். விவசாயிகளிடம் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஜெயக்குமார்,கடலூர் வட்டாட்சியர் பாலமுருகன், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அபுதாஹீர், நுகர்பொருள் வாணிபக் கழகம் கண்காணிப்பாளர் சண்முகம்,மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 17 July 2021 12:36 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!