/* */

தண்ணீல படம் காட்டறாங்க! உக்கடம் குளத்தில் கோவை மாநகராட்சி திட்டம்

உக்கடம் குளத்தின் அருகே, பொதுமக்களை ஈர்க்கும் வண்ணம், தண்ணீரில் படம் காட்டும் புதிய திட்டத்தை, கோவை மாநகராட்சி ஏற்படுத்த உள்ளது.

HIGHLIGHTS

தண்ணீல படம் காட்டறாங்க! உக்கடம் குளத்தில் கோவை மாநகராட்சி திட்டம்
X

உக்கடம் குளம் (கோப்பு படம்)

கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் ஒன்பது குளங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது நிதி ஒதுக்கப்பட்டு, 7 குளங்களில் வேலை நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதில், உக்கடம் பகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், "மூவி ஆன் வாட்டர்" என்ற அடிப்படையில், ரூ.3 கோடிக்கு, மாநகராட்சியின் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

உக்கடம் பெரியகுளத்தின் கரையில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டு இருக்கின்றது. அவ்விடத்தில் பொதுமக்களை ஈர்க்கும் வண்ணம், மூவி ஆன் வாட்டர் என்ற திட்டத்தின் கீழ், அங்கு ரூ. 3 கோடி செலவில் படம் காட்டும் புதிய கட்டமைப்பை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 11 March 2022 9:53 AM GMT

Related News