/* */

தள்ளுபடியாகாத கடன் விபரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்- பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவு

கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடியில் நிலுவையில் பயிர்க்கடன் விபரத்தை உடனடியாக தெரிவிக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

தள்ளுபடியாகாத கடன் விபரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்- பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவு
X

பைல் படம்.

தமிழகம் முழுவதும் கடந்த அதிமுக ஆட்சியில், கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12, 110 கோடி பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதற்கான ரசீதுகளையும் விவசாயிகள் பெற்று வந்தனர்.

ஆனால், கடந்த ஆண்டு வாங்கிய குறுகிய கால பயிர்க்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் எனவும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் வாங்கிய பயிர்க் கடன்களை மத்தியகால கடன்களாக மாற்றிவிட்டதால் அவற்றை தள்ளுபடி செய்ய முடியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடியில் 31.3.2016 நிலுவையில் உள்ள தள்ளுபடி செய்யப்படாத இதர விவசாயிகளின் பயிர்க்கடன்கள் விபரங்களை தெரிவிக்க வேண்டும்.

மேலும் மத்திய கால கடன்களாக மாற்றம் செய்யப்பட்டு 31.1.2021 நிலுவையில் இருந்த கடன்கள் பற்றிய விவரங்கள் அசல், வட்டி, அபராத வட்டி, இதர செலவுகளின் விவரங்களை முழுமையாக பெற்று விவரமாக பட்டியலிட்டு பதிவாளர் அலுவலகத்துக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Updated On: 24 July 2021 10:42 AM GMT

Related News