/* */

Chennai News in Tamil-மழை முன்னெச்சரிக்கை : அவசரகால உதவிக்கு காவல்துறை தயார்..!

வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

Chennai News in Tamil-மழை முன்னெச்சரிக்கை : அவசரகால உதவிக்கு  காவல்துறை தயார்..!
X

chennai news in tamil-தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால்(கோப்பு படம்) 

Chennai News in Tamil

சென்னை:

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவசர உதவி எண்கள் 112, 1070, 9445869843, 9445869848 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி பெய்துவருகிறது. கடந்த 10 நாட்கள் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழையின் தாக்கம் குறைவாகவே இருந்தது. இந்நிலையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த சில நாட்களாக சென்னை உட்பட தமிழ்நாட்டின் வட கடலோர மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

Chennai News in Tamil

வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திடீரென கடுமையான மழை பெய்தாலோ வெள்ளம் ஏற்பட்டாலோ அதனை எதிர்கொள்ளவும் மக்களைக் காப்பாற்றவும் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் வடகிழக்குப்‌ பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ குறித்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், "தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினருக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Chennai News in Tamil

தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சிப் பள்ளியின் மூலம் 17,305 காவல் ஆளிநர்களுக்கும், 1095 ஊர் காவல் படை ஆளிநர்களுக்கும், 793 தன்னார்வலர்களுக்கும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழைக்கான ADGP Operations அலுவலகத்தில் சிறப்புக் கட்டுப்பாட்டு அறை 24x 7 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்தந்த எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் மழைப்பொழின் அளவு, அணைகளின் நீர்மட்டம் போன்றவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், 24 மணிநேர அவசர உதவி எண்கள்: 112,1070 ஆகியவை செயல்படும். மேலும், 9445869843, 9445869848 ஆகிய எண்களிலும் அவசரகால உதவிகளுக்கு தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 540 பேர் கொண்ட 18 பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு பேரிடர் மீட்புக் குழுவிலும் 30 பேர் என்ற அடிப்படையில் 540 பேர் தயார் நிலையில் உள்ளனர்.

Chennai News in Tamil

பொதுமக்களை அவசர காலத்தில் பாதுகாக்க 18 குழுக்களும் அதிநவீன உயர்ரக மீட்பு கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 18 மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 Nov 2023 6:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!