/* */

மாடியில் இருந்து குதித்து தனியார் நிதி நிறுவன மேலாளர் தற்கொலை

சென்னை தியாகராயநகரில் கைகளை கத்தியால் அறுத்துக்கொண்டு 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்

HIGHLIGHTS

மாடியில் இருந்து குதித்து  தனியார் நிதி நிறுவன மேலாளர் தற்கொலை
X

சென்னை தியாகராயநகரில் கைகளை கத்தியால் அறுத்துக்கொண்டு, 4-வது மாடியில் இருந்து குதித்து தனியார் நிதி நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் முத்துராஜ் ( 49). மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்த இவர், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பணி நிமித்தமாக சென்னை வந்தார். தியாகராய நகர் ராமன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி, தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிசெய்து வந்தார்.கடந்த 26-ம் தேதி கோவை சென்று குடும்பத்தினரை சந்தித்து விட்டு, நேற்று முன்தினம் காலை முத்துராஜ் சென்னை திரும்பினார். வழக்கம்போல் அலுவலகத்திற்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார்.

நேற்று காலை முத்துராஜ், தனது இரண்டு கைகளையும் கத்தியால் அறுத்துக்கொண்டு, ரத்தம் சொட்டச்சொட்ட நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்தத பாண்டி பஜார் போலீசார் வந்து, சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், முத்துராஜ் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தினர்.

அவர், கோவை சென்று குடும்பத்தினரை சந்தித்து வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டுள்ளதால், குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேலை செய்த தனியார் நிதி நிறுவனத்தில் எதுவும் பிரச்னையால் உயிரை மாய்த்துக்கொண்டாரா? என்ற கோணத்தில் பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 31 Aug 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  5. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  6. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  8. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  9. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!