/* */

இன்று தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். சட்டமன்ற நூற்றாண்டு விழா, கலைஞர் படத் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க திட்டம்

HIGHLIGHTS

இன்று தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
X

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.சட்டமன்ற நூற்றாண்டு விழா, கலைஞர் படத் திறப்புவிழா உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க திட்டம்.

தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிக நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.

தமிழக சட்டப்பேரவையின் 100 வது ஆண்டு விழாவையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்று குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளார், அதன்படி 5 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இன்று (ஆகஸ்ட் 2) ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இன்று மாலை 05.00 மணிக்குத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெறும் விழாவில், முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உருவப்படத்தைத் திறந்துவைக்கிறார்.

முதல்வரும், குடியரசுத் தலைவரும் ஒரே மேடையில் அமர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். அதில் சபாநாயகர் அப்பாவு மற்றும் துணை சபாநாயகர் பிச்சாண்டியும் பங்கேற்கின்றனர். பின்னர் நாளை ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை சென்னை, நீலகிரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Updated On: 2 Aug 2021 10:43 AM GMT

Related News