/* */

சென்னையில் இன்று மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு துவக்கம்

சென்னை ஓமந்தூரார் அரசு தோட்ட வளாகத்தில் இன்று மருத்துவ படிப்புகளுக்காக கலந்தாய்வு துவங்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

சென்னையில் இன்று மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு துவக்கம்
X

சென்னை  ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இன்று மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கியது.

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கியது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் போன்ற மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்கிற அடிப்படையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் மட்டுமே மருத்துவ படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த நடைமுறை கடந்த சில ஆண்டுகளாகவே அமலில் உள்ளது. தமிழகத்தில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவ மாணவிகளுக்கு விதிவிலக்கு வாங்கி தருவோம் என தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்திருந்தாலும் அவர்களால் இதுவரை நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியவில்லை. இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இது ஒரு புறம் இருக்க நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பிற்கு மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் இந்தியா முழுமைக்கும் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்தும் மாணவ -மாணவிகள் தேர்வு எழுதினார்கள். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவர்களின் தேர்ச்சி விகித பட்டியல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும் போது தமிழகத்தில் நீட் தேர்வுக்கான மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு அக்டோபர் 19ஆம் தேதி தொடங்கும் என அறிவித்திருந்தார்.

மேலும் மருத்துவ படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் சேர்வதற்காக 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் 2695 மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 454 எம்.பி.பி.எஸ். சீட்டுகள் மற்றும் 14 பி.டி.எஸ். சீட்டுகள் உள்ளன என்றார்.

அந்த அடிப்படையில் இன்று மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது.2022 -23 ஆம் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் ஆறாம் தேதி வரை நடைபெற்றது. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேரும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 457 வரும் விண்ணப்பம் செய்திருந்தனர்.

பொதுப் பிரிவினருக்கு இன்று தொடங்கியுள்ள கலந்தாய்வு வருகிற 25ஆம் தேதி வரையிலும், சுயநிதி கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 21ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.இதன்படி முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்று 27 மற்றும் 28-ம் தேதிகளில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு 30ஆம் தேதி இறுதி முடிவுகள் வெளியிடப்படும். முதல் சுற்று கலந்தாய்வில் தேர்வானவர்கள் அடுத்த மாதம் நவம்பர் 4ஆம் தேதி கல்லூரியில் சேரலாம் என அறிவிக்கப்பட உள்ளது.

இன்று துவங்கிய கலந்தாய்வில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் 147 பேர் கலந்து கொண்டனர். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இந்த கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

Updated On: 19 Oct 2022 6:49 AM GMT

Related News