/* */

ஒரே வாரத்தில் முககவசமின்றி வந்த 1,037 பேர் மீது வழக்கு: ரூ.2,07 கோடி வசூல்

சென்னையில் ஒரே வாரத்தில் முககவசமின்றி வந்த 1,037 பேர் மீது வழக்கு, ரூ.2,07 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஒரே வாரத்தில் முககவசமின்றி வந்த 1,037 பேர் மீது வழக்கு: ரூ.2,07 கோடி வசூல்
X

சென்னை காவல் துறை.

கொரோனா தடுப்பு சிறப்பு நடவடிக்கையாக இன்று (30.10.2021) சென்னை பெருநகரில் முககவசம் அணியாமல் வெளியே வந்த 1,037 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து ரூ.2,07,400/- அபராதம் விதிப்பு.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், திரவ சுத்திகரிப்பான் பயன்படுத்துதல் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் ஆகிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பல்வேறு கண்காணிப்பு பணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கடந்த 23.10.2021 மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கின்றனரா என ஆய்வு செய்தனர். அங்குள்ள பல கடைகளின் உரிமையாளர்களிடமும், பொதுமக்களிடமும் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, முகக்கவசங்களை வழங்கினர்.

இன்று (30.10.2021) மாலை வரை, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சென்னை பெருநகர காவல் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு முககவசம் அணியாமல் வந்த 1,037 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.2,07,400/- அபராதம் வசூலித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 52,064 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, 1,04,12,800/- ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தீபாவாளி பண்டிகை வருவதை முன்னிட்டு பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்காக கூடும் ஜவுளிக்கடைகள், மால்கள், மார்க்கெட் மற்றும் கடற்கரைகள், பேருந்து முனையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

Updated On: 30 Oct 2021 5:30 PM GMT

Related News