/* */

செங்கல்பட்டில் ஒரே பகுதியில் 23 பேருக்கு கொரோனா சாலைகள் அடைப்பு

செங்கல்பட்டில் ஒரே பகுதியில் 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டு, வீட்டில் இருந்து மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

.செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா 2வது அலை மக்களை நாளுக்கு நாள் மிரட்டி வருகிறது. நகர பகுதியை பொறுத்தவரை பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. கொரோனா பாதிப்பு பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் செங்கல்பட்டின் முக்கிய பகுதியான சின்ன மணியக்கார தெரு பகுதியில் 20 வீடுகளில் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 20 வீடுகளில் உள்ளவர்கள் தவிர அந்த பகுதியில் வேறு யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் அந்த பகுதியை சுற்றிலும் அதிகம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது மேலும் பரவாமல் இருக்கும் வகையில் அந்த பகுதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அந்த பகுதி முழுவதும் சுற்றி காவல்துறை உதவியுடன் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டது. கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதியில் இருந்து தேவையில்லாமல் யாரும் வெளியே செல்லக்கூடாது என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Updated On: 5 May 2021 4:45 PM GMT

Related News