/* */

ஒளிமிகு பாரதம், ஒளிமயமான எதிர்காலம் : மின்சாரப் பெருவிழா

ஜெயங்கொண்டம் குறுக்கு சாலை தனியார் மண்டபத்தில் மின்சாரப் பெருவிழா மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஒளிமிகு பாரதம், ஒளிமயமான எதிர்காலம் : மின்சாரப் பெருவிழா
X

ஜெயங்கொண்டம் குறுக்கு சாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மின்சாரப் பெருவிழாவில் கலெக்டர் ரமண சரஸ்வதி பேசிய காட்சி.


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் குறுக்கு சாலை தனியார் மண்டபத்தில் மின்சாரப் பெருவிழா கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ரமண சரஸ்வதி பேசியதாவது:

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு 25.07.2022 முதல் 30.07.2022 வரை நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒளிமிகு பாரதம், ஒளிமயமான எதிர்காலம், மின்சக்தி 2047 நிகழ்ச்சி நடத்த அரசு உத்திரவிட்டுள்ளது. அதனடிப்படையில் இன்றைய திம் அரியலூர் மாவட்டத்தில் மின்சாரப் பெருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தீன்தயாள் உபயாதய கிராம் ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் தழுதாழைமேடு அம்பாபூர், அய்யூர், ஓலையூர், கீழப்பழுவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைப்பட்டுள்ளதுடன், மின் அளவி தரம் உயர்த்துதல் போன்ற மின்சார கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் ரூ.2571.692 இலட்சம் செலவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும், அரியலூர், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய பகுதிகளில் புதிய துணை மின்நிலையம், புதிய மின்மாற்றிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.1209.309 இலட்சம் செலவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்தியாவில் இத்திட்டத்தின் கீழ் 2921 புதிய துணை மின் நிலையங்கள் அமைத்தல், 3926 துணை மின் நிலையங்களை மேம்படுத்துதல், 6,04,465 சுற்று கி.மீ தாழ்வழுத்த மின்பாதை லைன்களை நிறுவுதல், 2,68,838 சுற்று கி.மீ 11 கி.வாட் உயர்மின் அழுத்த பாதை நிறுவுதல், 1,22,123 சுற்று கி.மீ விவசாய தேவை மின்னூட்டி அமைத்தல் போன்றவை ரூ.2,01,722ஃ- மொத்த செலவில் செயல்படுத்தப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளில் மின் விநியோக உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு சீரான மின்விநியோகம் வழங்குவதை மின்சார வாரியம் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு சீரான மின்விநியோகம் குறித்தும், மின்விநியோகம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம் மின் நுகர்வோர்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

கிராமங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கும் வகையில் மின் திட்டங்களுக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கிராமங்கள் முன்னேற்றத்தில் பொதுமக்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் கடந்த ஓராண்டில் தமிழகத்தில் ரூ.803 கோடி செலவில் 2.13 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தினை உள்ளடக்கி ஒரு லட்சம் விவசாயமின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மாநில் அளவில் மையப்படுத்தப்பட்ட 'மின்னகம்" மின்நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்ட 20.06.2021 முதல் 18.07.2022 வரை 9,82,000 அழைப்புகள் பதிவு செய்யப்ட்டு அதில் 9,72,180 (99மூ) அழைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசின் தொடர்முயற்சியால் 2021-22 நிதியாண்டில் மின் உறபத்தி நிலையங்களில் திறமையான செயல்பாடு, வட்டி விகிதம் குறைப்பு, உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ரூ.2200 கோடி சேமிப்பு இது போன்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் பல்வேறு மின் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய வேளாண் சேவை இணைப்புக்கான இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர்க்கு வலைதள வங்கி பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்துவதற்கான ஒற்றை கட்டண நுழைவாயில் 06.11.2022 முதல் செயல்படுத்தபட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அரியலூர் பவர்கிரிட் மாவட்ட நோடல் அலுவலர் சரத் சந்திரா, மேற்பார்வை பொறியாளர் அம்பிகா, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 July 2022 12:13 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!