/* */

அரியலூரில் நாளை கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட சிறப்பு முகாம் நாளை 10ம் தேதி 38 கிராமங்களில் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

அரியலூரில் நாளை கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில்,

அரியலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் 2021-22ஆம் ஆண்டு முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட 38 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, நீர்வள ஆதாரத்துறை, எரிசக்தித் துறை மற்றும் கைத்தறி துறை, கைவினைப்பொருட்கள் துறை மற்றும் ஜவுளி கதர் துறை ஆகிய துறைகள் இணைந்து ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசு உத்திரவின்படி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட சிறப்பு முகாம் 10.05.2022 அன்று 38 கிராமங்களில் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம் அரியலூர் வட்டாரத்தில் வாலாஜா நகரம், ரெட்டிப்பாளையம், கடுகூர், ஆலந்துறையார்கட்டளை, எருதுகாரன்பட்டி, காவனூர், நாகமங்கலம், புங்கங்குழி ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் செந்துறை வட்டாரத்தில் மணப்பத்தூர், தளவாய், ஆலத்தியூர், அசவீரன்குடிகாடு, மணக்குடையான் ஆகிய கிராம பஞ்சாயத்துகளிலும் திருமானூர் வட்டாரத்தில் அழகியமணவாளன், ஏலாக்குறிச்சி, கீழகாவட்டாங்குறிச்சி, சின்னப்பட்டாக்காடு, கண்டிராதீர்த்தம், பூண்டு ஆகிய கிராம பஞ்சாயத்துகளிலும் செயங்கொண்டம் வட்டாரத்தில் தழுதாலைமேடு, குந்தவெளி, முத்துசேர்வாமடம், கங்கை கொண்ட சோழபுரம், காட்டகரம், தத்தனூர், இறவாங்குடி ஆகிய கிராம பஞ்சாயத்துகளிலும் ஆண்டிமடம் வட்டாரத்தில் கூவத்தூர், அழகாபுரம், ஆண்டிமடம், பெரியகிருஷ்ணாபுரம், விளந்தை, இலையூர், சிலம்பூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளிலும் தா.பழூர் வட்டாரத்தில் அம்பாப்பூர், சிந்தாமணி, தா.பழூர், வேம்புகுடி, பருக்கல், ஆகிய கிராம பஞ்சாயத்துகள் என மொத்தம் 38 கிராம பஞ்சாயத்துகளில் நடைபெற உள்ளது.

இச்சிறப்பு முகாம்களில் பட்டா மாறுதல், வண்டல் மண் எடுத்தல், பயிர் கடன் மற்றும் உழவர் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறுதல் மற்றும் அனுமதி வழங்குதல், பயிர் காப்பீடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு குறித்த பணிகள் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம்களில் விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 9 May 2022 9:04 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  4. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  6. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வைட்டமின்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமாம்! எப்படி
  9. ஈரோடு
    தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை...