/* */

சத்தீஸ்கர் மாநில முதல்வரை சந்திக்க கரும்பு, நெல் உற்பத்தியாளர்கள் பயணம்

கரும்பு, நெல் உற்பத்தியாளர்கள், உழவர்கள் குழுவினர் அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சென்றனர்.

HIGHLIGHTS

சத்தீஸ்கர் மாநில முதல்வரை சந்திக்க கரும்பு, நெல் உற்பத்தியாளர்கள் பயணம்
X

சத்தீஸ்கர் மாநில முதல்வருக்கு நன்றி தெரிவிக்க அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து சத்தீஸ்கர் புறப்பட்ட கரும்பு மற்றும் நெல் உற்பத்தியாளர்கள்.


அதிக விலை கொடுத்து கரும்பு மற்றும் நெல்லை கொள்முதல் செய்துவரும் சத்தீஸ்கர் முதல்வரை சந்திக்க கரும்பு மற்றும் நெல் உற்பத்தியாளர்கள் ரயில் மூலம் சத்தீஸ்கருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

2021-22-ம் ஆண்டு கரும்பு அரவை பருவத்தில், இந்திய அரசு கரும்பிற்கான சட்டப்பூர்வ விலை டன் ஒன்றுக்கு ரூ.2,755 அறிவித்துள்ள நிலையில், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஸ் பாகல், இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இதுவரை தராத, மாநில அரசின் ஆதரவு விலையாக டன் ஒன்றுக்கு ரூ.795 சேர்த்து ரூ.3,550என அறிவித்து கொள்முதல் செய்கிறது.

அதேபோல், மத்திய அரசு நெல் ஒரு குவிண்டால் ரூ.1,940அறிவித்துள்ள நிலையில், ரூ.600 சேர்த்து ரூ.2,540-க்கு சத்தீஸ்கர் முதல்வர் கொள்முதல் செய்து வருகிறார்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளர்கள் மற்றும் நெல் உற்பத்தியாளர்கள் அடங்கிய உழவர்கள் குழுவினர் அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் தலைமையில் சென்றனர்.

கரும்பு மற்றும் நெல்லுக்கு கூடுதல் விலையை கொடுக்கும் சத்தீஸ்கர் மாநில முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், பாராட்டியும் கடந்த மாதம் 24-ம் தேதி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அனைவருக்கும் இனிப்புகளுக்கு மாற்றாக பேரீச்சம் பழங்களும், ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்களும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 18 April 2022 12:12 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!