/* */

அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சிறப்பு அரியலூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சிறப்பு அரியலூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்
X

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், செந்துறை கிராம ஊராட்சியில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி முன்னிலையில் நடந்த கிராம சபைக்கூட்டம்

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், செந்துறை கிராம ஊராட்சியில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் தன்னார்வ மற்றும் பொதுமக்கள் ஈடுபடுதல் குறித்தும், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்;, குடிநீரை சிக்கனமாகவும், முறையாகவும் பயன்படுத்துதல் குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்தும், மக்கள் திட்டமிடல் இயக்கம் வெற்றிகரமாக செயல்படுத்துவது குறித்தும், ஊட்டசத்து இயக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பணிகள் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, தற்போது உள்ள பணிகளின் தொகுப்பின் முன்னேற்றத்தினை பகிர்ந்துகொள்ளப்பட்டது.

2021-22ஆம் ஆண்டில் சேமிப்பு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற நிலை குறித்தும், தூய்மை பாரத இயக்கம் பற்றியும் விவாதிக்கப்பட்டு, கழிப்பறை கட்டி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்படடது. திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை தக்கவைப்பது குறித்தும், திடக்கழிவு மேலாண்மை திட்டம் பற்றியும் விவாதிக்கப்பட்டு, நெகிழிக்கு மாற்று பொருட்கள் பயன்படுத்துவது. திரவக்கழிவு மேலாண்மை திட்டம் பற்றியும், விரிவான கிராம சுகாதார திட்டத்தை பற்றியும், தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் 2021 குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, மின் சிக்கனத்தை கடைபிடித்தல், மின் சிக்கனம் தேவை இக்கனம் குறித்தும், ஜல் ஜீவன் திட்டம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கிராமத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

முதலமைச்சராக பதவி ஏற்ற உடன் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் அரசு திட்டங்கள் சென்றடையும் வகையில் அரசு துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு சென்று மக்களின் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றிடும் வகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் மனுநீதி நாள் திட்டம் தொடங்கப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் வாயிலாக, அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இத்திட்டத்தை கிராமங்கள் தோறும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உரியவர்களுக்கு சென்று சேர்கிறதா என்பதை முதலமைச்சர் காவல் நிலையங்கள், அரசினர் மாணவர் விடுதிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து, மக்களின் தேவைகளை கேட்டறிந்து வருகிறார். முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் திட்டங்களை மக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், ஒன்றியக்குழு பெருந்தலைவர் தேன்மொழி, கோட்டாட்சியர்அமர்நாத் (உடையார்பாளையம்), துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் கீதாராணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், செந்துறை ஊராட்சிமன்றத்தலைவர் செல்லம்கடம்பன், மற்றும் அரசு அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 2 Oct 2021 6:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!