/* */

அரியலூர்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி கஞ்சா மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கையில் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த மாதம் 4 ம்தேதி பயிற்சி காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்பொழுது ஜெயங்கொண்டம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில், உடையார்பாளையம் கைக்கள நாட்டார் தெருவை சேர்ந்த வினோத், ஜெயங்கொண்டம் கிழக்கு தெருவை சேர்ந்த பிரபாகரன், ஆகிய இளைஞர்கள் கீழகுடியிருப்பு தனியார் மண்டபத்திற்கு பின்புறத்தில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.

இதனையடுத்து மூன்று நபர்களையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 18,180 ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.




விசாரணை செய்ததில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த அருண்குமார், என்பவர் கஞ்ச விநியோகம் செய்ததாக கூறியதையடுத்து அவரை கடந்த மாதம் 10 தேதி கைது செய்தனர் காவல்துறையினர். இந்நிலையில் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் மேலும் வெளியே இருந்தால் போதைப்பொருள் விற்பதன் மூலம் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதால் நான்கு நபர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Updated On: 6 Jan 2022 9:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...