/* */

அரியலூர் மாவட்டம் திருமானூரில் கிறிஸ்தவர்களின் தவக்கால திருப்பயணம்

அரியலூர் மாவட்டம் திருமானூரைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஏலாக்குறிச்சிக்கு தவக்கால திருப்பயணம் மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டம் திருமானூரில் கிறிஸ்தவர்களின் தவக்கால திருப்பயணம்
X

தவக்காலத்தை முன்னிட்டு திருமானூர் அருளானந்தர் ஆலயத்தில் இருந்து  கிறிஸ்தவர்கள் தவப்பயணம் மேற்கொண்டனர்.

திருப்பயணம் மேற்கொண்ட 

இறைப்பணியை தொடங்குவதற்கு முன்பாக ஏசு உபவாசம் இருந்தார். அவரது சிலுவைப்பாடுகளை நினைவுக்கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாசம் இருப்பர். இந்த 40 நாட்களும் தவக்காலம் என அழைக்கப்படுகிறது.

நிகழாண்டுக்கான தவக்காலம் கடந்த மாதம் 2 ம் தேதி சாம்பல் புதன்கிழமையன்று தொடங்கியது. தவக்காலம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலி, ஆராதனைகள் மற்றும் சிலுவைபாடு குறித்து தியானங்கள் நடைபெற்று வருகிறது.

தவக்காலத்தை முன்னிட்டு, திருமானூர் அருளானந்தர் ஆலயத்தில் இருந்து ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயம் வரை தவக்கால சிலுவை பயணம் (திருப்பயணம்) நடைபெற்றது. திருமானூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் தொடங்கிய தவக்கால திருப்பயணத்தை பங்கு தந்தை லியோ ஆனந்த் தொடக்கி வைத்தார்.

ஏரளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு,விழுப்பணங் குறிச்சி,சுள்ளங்குடி,பெரியமறை வழியாக ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயம் சென்றனர். அங்கு ஆலயத்தின் பங்கு தந்தை சுவக்கின் தலைமையில், உதவி பங்கு தந்தைகள் இன்பென்ட்ராஜ், குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி ஆகியோர் முன்னிலையில் சிறப்பு தவக்கால சிலுவைபாதை திருப்பலி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிறிஸ்தவ ஆலயங்களின் பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 April 2022 6:40 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...