/* */

அரியலூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித்திட்ட மையம் தொடக்கம்

அரியலூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட மையத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித்திட்ட  மையம் தொடக்கம்
X

அரியலூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி மையத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.


அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாலாஜாநகரம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கத்தின் சார்பில் இல்லம் தேடி கல்வி மையத்தினை தொடங்கி வைத்து, சிறார்களுக்கு கல்வி உபகரணங்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தனர்.

தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில் 1 முதல் 8 வகுப்புகள் வரை உள்ள மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காகவும், இடைநின்ற மாணவர்களை கொண்டு தினசரி 1 முதல் 1.30 மணி நேரம் (மாலை 05.00 மணி முதல் 07.00 மணிக்குள்) கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ள தன்னார்வலர்களின் தொண்டு உணர்வின் அடிப்படையில், 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர்களை கொண்டு இல்லம் தேடிக்கல்வி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் இல்லம் தேடிக்கல்வி மையம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் தொடக்க நிலையில் 451 மையங்களும், உயர் தொடக்க நிலையில் 539 மையங்களும் என மொத்தம் 990 மையங்கள் இன்று தொடங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதன் தொடர்ச்சியாக மற்ற மையங்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படவும் உள்ளது. மேலும், இத்திட்டம் குறித்த விளக்கங்களுக்கு 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

அதனை தொடர்ந்து இல்லம் தேடிக் கல்வி குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலர் இராமன், உதவி மாவட்ட திட்ட அலுவலர் ப.பன்னீர்செல்வம், ஊராட்சிமன்றத்தலைவர் அபிநயா இளையராஜா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 4 Jan 2022 10:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...