/* */

மொழிப் போர் தியாகி சின்னசாமி சிலைக்கு மாலை அணிவிப்பு

கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தியாகி சின்னசாமி சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

HIGHLIGHTS

மொழிப் போர் தியாகி சின்னசாமி சிலைக்கு மாலை அணிவிப்பு
X

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள மொழிப்போர் தியாகி சின்னசாமி சிலைக்கு முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினர்.


மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தியாகி சின்னசாமி சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சின்னசாமி சிலைக்கு அவரது மகள் திராவிடச் செல்வி மற்றும் பேரன்,பேத்திகள் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.

அதிமுக சார்பில் மாவட்ட மாணவரணிச் செயலாளர் சங்கர் தலைமையில், முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் முன்னிலையில் கீழப்பழுவூர் கடைவீதியிலிருந்து ஊர்வலமாக வந்த அதிமுகவினர் பேருந்து நிலையத்தில் உள்ள சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


நிகழ்ச்சியில், முன்னாள் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், முன்னாள் எம்பி ஆ.இளவரசன், அரியலூர் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பொ.சந்திரசேகர் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

மதிமுக சார்பில் எம்எல்ஏ கு.சின்னப்பா, திமுக ஒன்றிய செயலாளர்கள் கென்னடி, அசோகசக்ரவர்த்தி, மதிமுக வடக்கு ஒன்றியச் செயலர் சங்கர், தமிழர் நீதிக் கட்சி சார்பில் அதன் நிறுவனர் சுபா.இளவரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலர் செல்வநம்பி, அரியலூர் தொகுதி பொறுப்பாளர் மருதவாணன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர் அன்பானந்தம்,


பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில வன்னியர் சங்க மாநிலச் செயலர் வைத்தி, பாமக தொகுதிச் செயலாளர் தர்ம.பிரகாஷ், தேமுதிக சார்பில், மாவட்டச் செயலர் ராமஜெயவேல், நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நீலமகாலிங்கம் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சமூக ஆர்வலர்கள் சார்பில் புவியியலாளர் சந்திரசேகர், கதிர்.கணேசன், தங்க சண்முக சுந்தரம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On: 25 Jan 2022 1:57 PM GMT

Related News