/* */

3 ஊராட்சி மன்றதலைவர், 13 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்

அரியலூர் மாவட்டத்தில் 3 ஊராட்சி தலைவர்கள், 13 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

3 ஊராட்சி மன்றதலைவர், 13 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்
X
அரியலூர்மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி.


அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :

அரியலூர் மாவட்டத்தில் 16 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 9ம் தேதி நடைபெற உள்ளது.

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒலையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் நாயகனைப்பிரியாள் மற்றும் மணகெதி ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் நடைபெறவுள்ளது.

அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஓட்டக்கோவில் ஊராட்சி (வார்டு 6) உறுப்பினர், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றியூர் ஊராட்சி (வார்டு 6) மற்றும் கோவிலூர் ஊராட்சி (வார்டு 1) ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் தளவாய் ஊராட்சி (வார்டு 9), கீழமாளிகை ஊராட்சி (வார்டு 4) மற்றும் சிறுகடம்பூர் ஊராட்சி (வார்டு 3) ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உட்கோட்டை ஊராட்சி (வார்டு 10) மற்றும் ஜெ.தத்தனூர் ஊராட்சி (வார்டு 5) ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் அழகாபுரம் ஊராட்சி (வார்டு 8), நாகம்பந்தல் ஊராட்சி (வார்டு 6), இடையக்குறிச்சி ஊராட்சி (வார்டு 2) மற்றும் இலையூர் ஊராட்சி (வார்டு 9) ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் அம்பாபூர் ஊராட்சி (வார்டு 8) ஊராட்சி வார்டு உறுப்பினர் தற்செயல் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் வாக்கு பதிவு அக்டோபர் 9ம் தேதி நடைபெறகிறது.

எனவே, அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை (Control Room) 04329-228902 எனும் தொலைபேசி எண்ணுடன் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மேற்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 16 Sep 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...